'ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா; தகுதி நீக்கத்தை ஏற்க முடியாது’ - மகாராஷ்டிரா சபாநாயகர் அதிரடி!

ஏக்நாத் ஷிண்டே அணி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை ஏற்க முடியாது என மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே அணிக்கு தாவிய எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது தொடர்பாக உத்தவ் தாக்கரே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க மகாராஷ்டிரா சபாநாயகர் தாமதிப்பதாக உத்தவ் தாக்கரே தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனையடுத்து, ஜனவரி 10-ஆம் தேதிக்குள் இவ்விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர சபாநாயகர் ராகுல் நார்வேகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 2022ம் ஆண்டு ஏக்நாத் ஷிண்டே அணி எம்.எல்.ஏக்களை உத்தவ் தாக்கரே நீக்கியதை ஏற்க முடியாது என ராகுல் நார்வேகர் தெரிவித்துள்ளார்.

கட்சித்தலைவரின் விருப்பத்தை, கட்சியின் ஒட்டுமொத்த விருப்பமாக கருத முடியாது எனக்கூறிய சபாநாயகர், ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என திட்டவட்டமாக அறிவித்தார்.

இதுகுறித்த முழுத் தகவல்களை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com