லாலு- நிதிஷூக்கு ஜால்ரா... சத்ருகனை நீக்க பாஜகவில் போர்க்கொடி

லாலு- நிதிஷூக்கு ஜால்ரா... சத்ருகனை நீக்க பாஜகவில் போர்க்கொடி
லாலு- நிதிஷூக்கு ஜால்ரா... சத்ருகனை நீக்க பாஜகவில் போர்க்கொடி
Published on

லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமாருக்கு ஆதரவாக உள்ள சத்ருகன் சின்காவை பாஜ கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என பீகார் மாநில பாஜக தலைவர் சுஷில்குமார் மோடி லியுறுத்தியுள்ளார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் சத்ருகன் சின்கா பாட்னா தொகுதி பாஜக எம்.பி.யாக உள்ளார். பீகார் சட்டசபை தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக பாஜக தலைமை அறிவிக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததால் அதிருப்தியில் லாலு மற்றும் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக செயல்படுவதாக பீகார் மாநில பாஜக தலைவர் சுஷில்குமார் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக மேலிடத் தலைவர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் சத்ருகன் சின்கா அடிக்கடி முதல்வர் நிதீஷ் குமாரை சந்தித்து வருகிறார். சமீப காலமாக லாலு பிரசாத், அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அதனால் சத்ருகன் சின்காவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பீகார் மாநில பாஜக தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மிகவும் பிரபலமாக இருப்பவர்கள் (சத்ருகன் சின்கா) கட்சிக்கு மிகவும் விசுவாச மற்றவர்களாக இருக்கிறார்கள். இதுபோன்ற துரோகிகளை கட்சியை விட்டு விரைவில் தூக்கி எறிய வேண்டும். ‘சத்ரு’ என்றாலே விரோதி, பகைவன் என்று அர்த்தம். பாஜகவின் ‘சத்ரு’ லாலு, நிதிஷ்குமார் போன்றவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதை யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com