அமெரிக்க தேர்தல் எதிரொலி: சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவு!

இன்றைய 12 மணி நிலவரப்படி நிஃப்டி 1.27% சரிந்து 23,886 ஆகவும், சென்செக்ஸ் 1.18% குறைந்து 78,482 ஆகவும் உள்ளது.
தங்கம் மற்றும் பங்குச் சந்தை
தங்கம் மற்றும் பங்குச் சந்தைபுதியதலைமுறை
Published on

கடந்த சில நாட்களாக பங்குசந்தையானது தொடர் சரிவை கண்டு வருகிறது. முதலீட்டாளர்கள் அமெரிக்க தேர்தலை முன்னிட்டு தங்களின் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். அதனால் இந்திய பங்கு சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை காரணமாகக் கொண்டு இந்திய பங்கு சந்தையானது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் 6 லட்சம் கோடி இழப்பை சந்தித்தனர்.

இன்றைய 12 மணி நிலவரப்படி நிஃப்டி 1.27% சரிந்து 23,886 ஆகவும், சென்செக்ஸ் 1.18% குறைந்து 78,482 ஆகவும் இருந்தது.

நிஃப்டியானது மேலும் சரிவைக்கண்டு 23,650ஐ நோக்கி போகலாம் என்றும், அதே சமயம் 24,100 புள்ளிகளைக் கடந்தால் இந்தியப் பங்கு சந்தை கணிசமான உயர்வை சந்திக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், சில பங்குகள் நல்ல லாபத்தை ஈட்டி வருகிறது. அதன்படி,

ஓரியண்ட் டெக்னாலஜிஸ் பங்கின் விலையானது கிட்டத்தட்ட 16% அதிகரித்து 365.65 ஆக உள்ளது.

அதே போல் ரேமண்டின் பங்குகள் 4.5 % அதிகரித்துள்ளது.

பிரிமியர் எனர்ஜிஸ் பங்கின் விலையானது 7% உயர்வைக் கண்டுள்ளது.

நிஃப்டி வங்கியானது கடந்த சில நாட்களாக தொடர் சரிவை கண்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி பேங்க் நிஃப்டியானது 247.50 புள்ளிகள் சரிவைக்கண்டு 50935 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய். 15 குறைந்து ரூ.7,355க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 58,960 க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 1 ரூபாய் குறைந்து 105 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com