டெல்லி 5 நட்சத்திர ஓட்டலில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

டெல்லி 5 நட்சத்திர ஓட்டலில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு
டெல்லி 5 நட்சத்திர ஓட்டலில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு
Published on

டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் பணியாற்றி வரும் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட ‌சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலின் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒருவர், பணியில் இருக்கும் ஒரு பெண்ணின் சேலையை இழுத்து பாலியல் தொந்தரவு கொடுக்கும் காட்சிகள் சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளன.

கடந்த மாதம் 29 ஆம் தேதி நடந்த இந்த ‌நிகழ்வு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் தனியாக செல்லும் பெண்கள் பாலியல் வன்கொடுமையை சந்தித்து வந்த நிலையில், தற்போது பணியிடங்களிலும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com