இத்தனை சிறுமிகள் விடுதிகளில் பாலியல் கொடுமையா ? திடுக் ரிப்போர்ட்

இத்தனை சிறுமிகள் விடுதிகளில் பாலியல் கொடுமையா ? திடுக் ரிப்போர்ட்
இத்தனை சிறுமிகள் விடுதிகளில் பாலியல் கொடுமையா ? திடுக் ரிப்போர்ட்
Published on

பீகார் மாநிலத்தில் உள்ள 14 பெண்கள் மற்றும் சிறுமிகள் விடுதிகள் பாலியல் வன்கொடுமைக்கான கூடாரமாக இருப்பதாக சிபிஐ விசாரணையில் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தச் செய்தி பீகார் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையை சேர்ந்த டாட்டா சமூக அறிவியல் நிறுவனம் பீகாரில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் தணிக்கை மேற்கொண்டது. அப்போது முசாபர்பூரில் இயக்கும் அரசு உதவி பெறும் காப்பகத்தில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு ள்ளதாக அறிக்கை சமர் பித்தது.

இது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தக் காப்பகத்தில் இருந்த 42 சிறுமிகளும் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். முதலில் 29 சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர்கள் அனைவரும் மாத கணக்காகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அறிக்கை கூறியது. இந்நிலையில் மேலும் 5 சிறுமிகளின் மருத்துவ அறிக்கை வெளியானது. அதில் அவர்களும் மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அனைத்து மாணவிகளுமே பாலியல் வன்கொடுக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பீகார் விடுதியில் இருப்பவர்களாலும் அங்கு வருகை தந்தவர்களாலும் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளில் சிலருக்கு கரு உருவாகியுள்ளது.இதையறிந்த நிர்வாகம் பல சிறுமிகளுக்கு கருக்கலைப்பும் செய்துள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியான பிரஜேஷ் குமார் தாக்கூரை, அவர்தான் இந்த விடுதியை நடத்தி வந்தவர். இவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சிறுமிகள் விடுதிக்கு மாநில சமூக நலத்துறை அமைச்சர் குமாரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேஷ்வர் வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து குமாரி மஞ்சு வர்மா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் குமாரி மஞ்சு வர்மா ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் நிதிஷ் குமாரிடம் வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com