பங்குசந்தை
வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு சந்தையானது பெரும் சரிவுடன் ஆரம்பித்துள்ளது. சென்செக்ஸ் 1500 புள்ளிகள் சரிவுடன் ஆரம்பித்த வர்த்தகமானது, மேலும் 1000 புள்ளிகள் இறங்கி 78619 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.
அதே போல் நிப்டி 750 புள்ளிகள் சரிவுடன் 23997 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. அதேபோல் வங்கி நிப்டியானது 1500 புள்ளிகள் இறங்கி 49720க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.
பங்கு சந்தை சரிவுக்கு காரணம் என்ன?
பங்கு வர்த்தகம் குறைவதற்கான காரணம் ஜப்பான், தென்கொரியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற உலகளாவிய சந்தைகளில் பொருளாதாரம், மந்த நிலையை நோக்கிச்செல்வது என்று கூறப்படுகிறது. இது ஒரு காரணம் என்றாலும், பெஞ்ச்மார்க் குறியீடுகள் 6 சதவீதம் வரை குறைவும் ஒரு காரணம். மேலும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போரைப் பற்றிய அச்சம் , இஸ்ரேல் ஈரான் பிரச்சனை, மேலும் இந்தியாவிலிருந்து FPI(Foreign portfolio investment) வெளியேற்றம் போன்ற காரணங்களினால் பங்கு சந்தையானது சரிவை சந்தித்து வருகின்றது.
முதலீட்டாளர்கள் கவலை:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது ரூபாய் 83.80 க்கு சரிந்ததால், இன்று இந்தியா பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மேலும் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததை அடுத்து பங்குசந்தையில் ரூ.9.51 லட்சம் கோடி நட்டத்தை அடைந்தனர். இது முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது.
தங்கத்தின் விலை
சென்னையில் தங்கத்தின் விலையானது சமீப வாரங்களாக இறங்கி வந்தாலும் இன்று ஒரு கிராம் 20 ரூபாய் அதிகரித்து ரூபாய் 6470 க்கு விற்பனையாகிறது. சவரன் ரூபாய் 51760 ஆக உள்ளது.
வெள்ளியின் விலையானது கிராமிற்கு 10 பைசா அதிகரித்து ஒரு கிராம் 91 ரூபாய்க்கு விற்பனையாகிறது.