தமிழரும் தோனியின் நண்பருமான ரஞ்சித்துக்கு ராணுவத்தின் ‘சேனா’ விருது

தமிழரும் தோனியின் நண்பருமான ரஞ்சித்துக்கு ராணுவத்தின் ‘சேனா’ விருது
தமிழரும் தோனியின் நண்பருமான ரஞ்சித்துக்கு ராணுவத்தின் ‘சேனா’ விருது
Published on

தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ரஞ்சித்துக்கு ராணுவத்தில் வீரத்திற்கான சேனா விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவரது தந்தை திருப்பூரில் உள்ள சைனிக் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்திய ராணுவப் படையில் பாராசூட் வீரராகவும், கேப்டனாகவும் இருக்கும் ரஞ்சித் குமாருக்கு ராணுவத்தின் கவுரவ விருதான ‘சேனா’ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது தரைப்படையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும். அதுமட்டுமின்றி ராணுவத்தின் குறிப்பிட்ட காலகட்டத்தில் சிறந்து செயல்படும் வீரர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளை ஒழிக்கும் தாக்குதல் திட்டத்தில் சிறந்து விளங்கியதற்காக ரஞ்சித் குமாருக்கு ‘சேனா’ விருது வழங்கப்பட்டிருக்கிறது. இவருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறந்த நண்பராவார். தோனி ராணுவத்தில் பயிற்சி பெற்றபோது, ரஞ்சித்துடன் நீண்ட நேரம் பயிற்சி எடுத்திருக்கிறார். இருவரும் ஒன்றாக டேபிள் டென்னிஸ், கேரம் உள்ளிட்ட விளையாட்டுகளையும் விளையாடியுள்ளனர்.

விருது பெற்ற ரஞ்சித், தோனி குறித்து கூறும்போது “நாங்கள் நீளம் தாண்டும் பயிற்சியின்போது சந்தித்தோம். தோனி எனக்கு சிறந்த நண்பராகவும், வழிகாட்டியாகவும் செயல்பட்டார். எனது தந்தை மற்றும் பள்ளிக்குப் பிறகு தோனி ஒரு சிறந்த ஊக்கமளிக்கும் நண்பராக திகழ்ந்தார்” என்று தெரிவித்தார். அண்மையில் ரஞ்சித் குமார் அமெரிக்க சிறப்புப் படைகளுக்கு பயிற்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com