இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை தலிபானுடன் ஒப்பிட்டமைக்காக, சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.யொருவர் மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த இருவர் என மொத்தம் மூவர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.
தலிபான் என்பது இந்திய அரசியல் சட்டத்தின்படி, பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட அமைப்பாகும். அதன்படி பார்க்கும்போது, இந்த எம்.பி.க்கள் மற்றும் இருவரின் கருத்துகள், தேசத்துரோகமாக பார்க்கப்படுகிறது. அதனாலேயே எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டுள்ளது” எனக்கூறியுள்ளார்.
ஷாபிக்கர் ரஹ்மான் பார்க், தற்போது பேசுகையில், “இவர்கள் சொல்வது போல நான் தலிபான்களை எவருடனும் (இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன்) ஒப்பிடவில்லை. என் கருத்து, திரிக்கப்பட்டுள்ளது. நான் ஆப்கன் குடிமகனில்லை... இந்திய குடிமகன்தான். அப்படியிருக்கும்போது, எனக்கு ஆப்கன் குறித்து பேசவேண்டிய எந்த அவசியமும் இல்லை.
நான், என்னுடைய நாட்டின் அரசு விதிகளுக்குட்பட்டே எதுவாகினும் செயல்படுவேன்” எனக்கூறியுள்ளார்.
ஷாபிக்கர் ரஹ்மான் பார்க்கின் இந்தக் கருத்தை, உ.பி.யின் துணை முதல்வர் கேசவ் மௌரியா கடுமையாக விமர்சித்துள்ளார். “சமாஜ்வாடி கட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அவர்களில் சிலர் ’ஜன கன மன’ தேசியகீதம் பாடமாட்டாரகள்; இன்னும் சிலர் இப்படி தலிபான்களுக்கு ஆதரவு தெரிவிப்பர்; இன்னும் சிலர் பயங்கரவாதிகள் பிடிப்பட்டால் காவல்துறையை குற்றம் சொல்வர்” என காட்டமாக கூறியுள்ளார். மேலும் “இந்த எம்.பி. ஹாபிக்கர் ரஹ்மான் பார்க் கூறிய கருத்து உண்மையெனில், இவருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் கானின் தலிபான் வெற்றி வரவேற்புக்கும் வித்தியாசமில்லை” எனக்கூறியுள்ளார்.