கொரோனா: கேரளாவில் 10 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு

கொரோனா: கேரளாவில் 10 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு
கொரோனா: கேரளாவில் 10 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு
Published on

கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக கேரள மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்கு 15 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்து கொரோனா பாதிப்பு இப்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில் தான் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டார் என்றாலும் அதன் பின்னர் கேரள மாநில அரசு எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

ஆனால் திடீரென கடந்த இரண்டு மாதங்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அம்மாநிலத்தில் அதிகமாகி வருகிறது. இப்போதுவரை கொரோனா காரணமாக மட்டும் அம்மாநிலத்தில் 90,565 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், உள்பட 10 மாவட்டங்களுக்கு நவம்பர் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தற்போதுதான் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் தற்போது மீண்டும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com