நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்க உள்ளது.
இந்தாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் திங்கள்கிழமை தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ள இரண்டாவது அமர்வில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில் இத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் அமைச்சர்கள் ஏ.கே.ஆண்டனி, ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு பிரச்னையை பிரதானமாக எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில் இக்கூட்டத் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.