முறைகேடாக நடைபெற்ற பங்கு வர்த்தகம்: முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்!

முறைகேடாக நடைபெற்ற பங்கு வர்த்தகம்: முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்!
முறைகேடாக நடைபெற்ற பங்கு வர்த்தகம்: முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்!
Published on

முறைகேடாக நடைபெற்ற பங்கு வர்த்தகம் தொடர்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம், பங்கு வர்த்தக மோசடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, 2007 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம், தனது பெட்ரோலிய நிறுவனத்தின் பங்கு விற்பனையின்போது மோசடி செய்திருந்ததை கண்டறிந்தது. இதையடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 25 கோடி ரூபாயும், அதன் தலைவரான முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாயும் செபி அபராதம் விதித்துள்ளது

அதோடு மேலும் இரண்டு நிறுவனங்கள் 20 மற்றும் 10 கோடி ரூபாய் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

2007இல் ரிலையன்ஸ் பெட்ரோலிய லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விவகாரத்தில் முறைகேட்டை செய்தமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் பெட்ரோலிய நிறுவனம் 2009இல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. இதனை 95 பக்க அறிக்கையாக வெளியிட்டுள்ளது SEBI.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com