மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
கொரோனா பரவல் காரணமாக மகாராஷ்டிராவில் கடந்த 8ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் ஒன்று முதல் 12ஆம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வருகை தரும் மாணவர்கள் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்கப்படுவர் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் நாள் என்பதால் மும்பை உள்ளிட்ட நகரங்களில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது. அண்மையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மகாராஷ்டிராவை சேர்ந்த 62 விழுக்காடு பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது தயக்கமாக உள்ளதென தெரிவித்துள்ளனர்.