கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த அமைச்சர்கள் நேரில் சென்று பள்ளிகளை பார்வையிட வலியுறுத்தியுள்ளார். வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்கவும், கொரோனா விதிகளை பின்பற்றவும் பெற்றோர் அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.