கட்டணம் செலுத்தாத மாணவர் கையில் முத்திரை பதித்த பள்ளி நிர்வாகம்

கட்டணம் செலுத்தாத மாணவர் கையில் முத்திரை பதித்த பள்ளி நிர்வாகம்
கட்டணம் செலுத்தாத மாணவர் கையில் முத்திரை பதித்த பள்ளி நிர்வாகம்
Published on

கல்விக் கட்டணத்தை செலுத்த நினைவூட்டுவதற்காக, மாணவனின் கையில் பள்ளி நிர்வாகம் முத்திரை வைத்த சம்பவம் பஞ்சாபில் நடைபெற்றுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரின் மகன் ஹர்ஷ்தீப் சிங். இவர் தனியார் பள்ளியில் ஏழாம் ‌வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் ஹர்ஷ்தீப் வருடாந்திர கல்விக் கட்டணம் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால் கல்விக் கட்டணம் செலுத்த நினைவூட்டலுக்காக மாணவன் ஹர்ஷ்தீப் சிங் கையில், பள்ளியின் முத்திரையை வைத்து ஆசிரியர் அனுப்பியுள்ளார். 

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் ஹர்ஷ்தீப் சிங்கித் தந்தை கேட்டுள்ளார். அதற்கு தேர்வு நடைபெற்று வருவதால் மாணவன் நோட்டு புத்தகம் எதுவும்‌ கொண்டுவராததால் கையில் முத்திரை பதித்து அனுப்பியதாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மாணவரை அவமதித்த பள்ளி நிர்வாகத்தின் செயல் குறித்து பாதிக்கப்பட்டவரின் தந்தை மாவட்ட கல்வி துறைக்கு புகார் அளித்தார். இதற்கு விளக்கம் அளிக்கும்படி பள்ளி நிர்வாகத்துக்கு மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com