தனியார் பள்ளி ஒன்றில் தேர்வில் ப்ளூவேல் குறித்து கேள்வி இடம் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பரவியுள்ள ப்ளுவேல் விளையாட்டு பலரின் உயிரை பறித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் இந்த விளையாட்டின் பிடியில் சிக்கி தவிக்கும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. இதையடுத்து ப்ளுவேல் விளையாட்டை தடை செய்யுமாறு உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுக்கு அறிவித்தது.
இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் தேர்வில் ப்ளுவேல் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத் தாளில் ப்ளூவேல் விளையாட்டு குறித்து நண்பருடன் உரையாடுவது போன்று சொந்த கருத்தை 50 வரிகளுக்கு மிகாமல் எழுதுக என்று கேட்கப்பட்டிருந்தது.
ப்ளுவேல் குறித்து போலீசார் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், வினாத்தாளில் வெளியான ப்ளுவேல் தொடர்பான இந்த கேள்விக்கு பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பதிலளித்துள்ள பள்ளி நிர்வாகம் ப்ளூவேல் குறித்து மாணவர்களின் மனநிலையை அறியவே இதுபோன்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.