கடந்த 2018ஆம் ஆண்டு யூடியூபர் துருவ் ரத்தி வெளியிட்ட வீடியோ ஒன்றை அரவிந்த் கெஜ்ரிவால் தமது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ பாஜக ஐடி பிரிவு குறித்து அவதூறு பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அளிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் சம்மனை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வீடியோவை மறுபதிவு செய்தது ஒரு தவறு என உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து எக்ஸ் வலைதளம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கோரவேண்டும் என புகார் அளித்த பாரதிய ஜனதாவின் விகாஷ் சாங்கிருத்யாயன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். மன்னிப்பு கோரா தயாரா என உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலிடம் உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது.
இந்நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.