“நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு கொலீஜியம்தான் காரணம்” - உச்சநீதிமன்றம்

“நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு கொலீஜியம்தான் காரணம்” - உச்சநீதிமன்றம்
“நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு கொலீஜியம்தான் காரணம்” - உச்சநீதிமன்றம்
Published on

உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்திற்கான தாமதத்திற்கு உச்சநீதிமன்ற கொலீஜியமே பொறுப்பு என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் என்று அழைக்கப்படும் மூத்த நீதிபதிகள் கொண்ட குழுவின் பரிந்துரையின் மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கப்படுவது நடமுறை. இதற்காக உச்சநீதிமன்ற கொலீஜியம் தகுதியுடைய நீதிபதிகளின் பெயர் பட்டியலை பரிசீலித்து அவற்றை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பும். அதன்பின்னர் மத்திய அரசு அந்தப் பட்டியலிலுள்ளவர்களை பரிசீலித்து நீதிபதி பதவிக்கான நியமன ஆணையை வழங்கும். ஆனால் ஒருசில நேரங்களில் கொலீஜியம் பரிந்துரை செய்த பெயர்களை மறுபரிசீலனை செய்ய கூறி மத்திய அரசு திருப்பி அனுப்புவதும் உண்டு.

இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் தாமதம் ஏற்படுவது தொடர்பாக ஒரு பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை ‘Centre for Public Interest Litigation’ என்ற தன்னார்வு தொண்டு நிறுவனம் தொடுத்துள்ளது. 

இந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், “நீதிபதிகளின் நியமனத்தில் கொலீஜியத்தின் பரிந்துரையிலுள்ள பெயர்களை ஒப்புதல் செய்வதில் மத்திய அரசு தாமதம் ஏற்படுத்துகிறது. அத்துடன் நீதிபதிகளின் நியமனத்தில் இந்தத் தாமப்படுத்துதல் மூலம் மத்திய அரசு மறைமுகமாக தலையிடுகிறது. இது நீதிமன்றத்தின் சுதந்திரத்தில் மத்திய அரசின் தலையிடுவதாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மனுவில் “கொலீஜியத்தால் மறுபடியும் பரிந்துரை செய்யப்பட்ட நீதிபதிகளின் பெயரை பட்டியலை மத்திய அரசு வெளியிடவேண்டும் என ஆணை பிறப்பிக்கவேண்டும் ”என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், “நீதிபதிகளின் நியமனம் தற்போது விரைவாகதான் நடக்கின்றது. மேலும் தற்போது நிலுவையிலிருக்கும் நீதிபதி நியமனங்கள் தொடர்பான கோப்புகளில் அதிகப்படியான கோப்புகள்  உச்சநீதிமன்றத்தின் கொலீஜியத்திடமே உள்ளன.

உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் நீதிபதிகள் நியமனங்கள் தொடர்பான 80 கோப்புகள் நிலுவையில் உள்ளன. ஆனால் மத்திய அரசிடம் தற்போது நீதிபதிகள் நியமனம் தொடர்பாக 27 கோப்புகள்தான் நிலுவையில் உள்ளன. இதனால் நீதிபதிகள் நியமனத்தில் ஏற்படும் தாமதத்திற்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் கொலீஜியமே காரணம்” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com