இந்தியா
உத்தரப்பிரதேச மாணவர் அறையப்பட்ட வழக்கு: உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு!
உத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர், சக மாணவா்களை வைத்து இஸ்லாம்a மாணவரை அறையச் செய்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
இது குறித்து உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது பெற்றோரை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
மேலும், வழக்கு விசாரணை குறித்து செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரப்பிரதேச மாநில அரசுக்கும், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.