“விசாரணைக்கு சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்பது அபாண்ட குற்றச்சாட்டு” - சிங்வி

“விசாரணைக்கு சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்பது அபாண்ட குற்றச்சாட்டு” - சிங்வி
“விசாரணைக்கு சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்பது அபாண்ட குற்றச்சாட்டு” - சிங்வி
Published on

ஐஎன்எக்ஸ் வழக்கு விசாரணையில் ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்பது அபாண்டமான குற்றச்சாட்டு என வழக்கறிஞர் சிங்வி தெரிவித்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த விசாரணையில் சிதம்பரம் சார்பில் அவரது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். அதில் ''ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கத்துறை சிதம்பரத்தை ஏற்கனவே 3 நாட்கள் விசாரித்தனர். விசாரணைக்கு ப.சிதம்பரம் முழு ஒத்துழைப்பு வழங்கினார். ஆனால் ஒத்துழைப்பு தரவில்லை என அமலாக்கத்துறை அபாண்டமாக குற்றஞ்சாட்டுகிறது'' என தெரிவித்தார். 

11 ஆண்டு பழமையான இவ்வழக்கில் ஆவணங்களை சிதைக்க இன்னும் என்ன உள்ளது என்றும் சிங்வி கேள்வி எழுப்பினார். சிதம்பரத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள குற்றப்பிரிவு தொடர்பான சட்டத்திருத்தம் 2009ம் ஆண்டுதான் கொண்டு வரப்பட்டதாகவும் ஆனால் 2007ம் ஆண்டில் நடந்த ஒரு நிகழ்வை அதற்கு முன் தேதியிட்டு குற்றமாக கருத முடியும் என்றும் சிங்வி கேள்வி எழுப்பினார். 

இதற்கிடையில் இவ்வழக்கில் சிதம்பரத்திடம் ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிடுமாறும் அப்போதுதான் உண்மை வெளிவரும் என்றும் வழக்கறிஞர் கபில் சிபல் நீதிபதிகளை கேட்டுக்கொண்டார். சிதம்பரம் தரப்பின் வாதங்களுக்கு பதில் தர தமக்கு அவகாசம் தேவை என அமலாக்கத்துறை வழக்கறிஞர் சிங்வி கேட்டுக்கொண்டதை அடுத்து வழக்கை நீதிபதிகள் இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

இன்று விசாரணை முடியும் வரை சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதே வழக்கில் ஏற்கனவே ப.சிதம்பரத்தை கைது செய்துள்ள சிபிஐ அவரிடம் இன்றும் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com