2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில் நிற்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில் நிற்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில் நிற்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
Published on

இரண்டு குழந்தைகளுக்கும் மேல் பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. வேட்பாளர்கள் தேர்வு, தொகுதிப் பங்கீடு எனக் கட்சிகளின் அரசியல் நிலவரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. 

இதனிடையே இரண்டு குழந்தைகளுக்கும் மேல் பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கக் வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கான மானியங்கள், அரசு வேலை உள்ளிட்டவற்றையும் வழங்கக் கூடாது என வலியுறுத்தினார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 2 குழந்தைகளுக்கும் மேல் பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தங்களால் கூற இயலாது என்றும் அப்படி கூற தங்களுக்கு அதிகாரமும் கிடையாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com