"பொட்டு அணிந்து வரக்கூடாது என சொல்ல முடியுமா?"-ஹிஜாப் அணிய தடைவிதித்த கல்லூரி; உச்சநீதிமன்றம் கேள்வி

திலகம் வைத்துக்கொண்டோ, பொட்டு வைத்துக் கொண்டோ வராதீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? என மும்பையின் கல்லூரி ஒன்றிற்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.. ஹிஜாப் அணிய தடைவிதித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்pt web
Published on

செய்தியாளர் நிரஞ்சன்

பெயரில் கூடத்தான் மதம் இருக்கிறது

மும்பையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று அங்கு படிக்கும் மாணவிகள் ஹிஜாப், ஸ்கார்ப், தலைப்பாகை போன்றவற்றை அணிந்து வருவதற்கும், அதை அணிந்து கொண்டு தேர்வு எழுதுவதற்கும் தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது. இதற்கு எதிராக மாணவிகள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்கள். அந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்pt web

அப்போது மாணவிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கடந்த நான்கு வருடங்களாக மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதாகவும், ஆனால் தற்போது திடீரென்று அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, அவர்களை வகுப்பறைகளுக்குள் அனுமதிப்பதில்லை, அவர்களது வருகையும் பதிவு செய்யப்படுவதில்லை என்று வாதங்களை முன் வைத்தார்.

அப்போது பேசிய நீதிபதி, பெயரில் கூட தான் மதம் இருக்கிறது; அதற்கென்று தனியாக விதிகளை தயாரிக்கலாமா என கல்லூரி நிர்வாகத்திற்கு காட்டமாக கேள்வி எழுப்பினார்.

உச்சநீதிமன்றம்
”நீரஜ் சோப்ராவும் என்னுடைய மகன் தான்..” - இதயங்களை வென்றார் பாகிஸ்தான் வீரர் அர்ஷத்தின் தாய்!

சுதந்திரம் அடைந்த பிறகும் இப்படி நடப்பது துரதிர்ஷ்டம்

அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த 441 மாணவிகள் இதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக கல்லூரியில் நாங்கள் உடை மாற்றுவதற்கான தனியான இடத்தையும் அமைத்துக் கொடுத்திருக்கிறோம் என தெரிவித்தார்

பொட்டு, திலகம் இடாதீர்கள் என கூற முடியுமா? - உச்சநீதிமன்றம் கேள்வி
பொட்டு, திலகம் இடாதீர்கள் என கூற முடியுமா? - உச்சநீதிமன்றம் கேள்வி

”என்ன உடை அணிய வேண்டும் என்பதை சொல்லி பெண்களை எப்படி மேம்படுத்த முடியும். இங்கே பெண்களுக்கான உடைத்தேர்வு எங்கே இருக்கிறது? அவர்கள் என்ன உடை அணிந்து இருக்கிறார்கள் என்பதை திடீரென பார்த்துவிட்டு, திடீரென இந்த முடிவை எடுத்து இருக்கிறீர்கள். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் நடப்பது துரதிஷ்டவசமாக இருக்கிறது” என கூறிய நீதிபதிகள், இவை போன்றவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கூறினர்.

உச்சநீதிமன்றம்
துப்பாக்கியால் சுட்டப்படி நடனம்.. சர்ச்சையில் சிக்கிய பாடி பில்டர் புகழ் திகார் சிறை அதிகாரி! #Video

பொட்டு வைத்துக் கொண்டு வரக்கூடாது என உங்களால் சொல்ல முடியாதா?

அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இதே விவகாரம் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, ஹிந்து மதத்தை சேர்ந்த குழு ஒன்று இதில் தலையிட முயன்றது. ஆனால், அதை நாங்கள் அங்கேயே எதிர்த்தோம். எங்களுக்கு தேவை கல்லூரி சூழலில் சுமூகமான நிலைமை இருக்க வேண்டும் என்பதுதான். இந்த பெண்கள் இந்த உடைகளை அணிந்து வந்தார்கள் என்றால், இந்து குழுவை சேர்ந்த மாணவர்கள் அவர்கள் சார்ந்த உடைகளை அணிவார்கள் என்று வாதங்களை முன்வைத்தார்.

அதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், திலகம் வைத்துக் கொண்டு வருவதையோ பொட்டு வைத்துக் கொண்டு வருவதையோ நீங்கள் தடை செய்தீர்களா? அவ்வாறு அணிந்து வரக்கூடாது என்று உங்களால் சொல்ல முடியுமா? என காட்டமாக கேள்வி எழுப்பினர்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்முகநூல்

அவர்களுக்கு தேவையானதை அவர்கள் அணியட்டும்.. தேவையில்லை என்பதை அவர்கள் காலப்போக்கில் புரிந்து கொள்வார்கள் என நீதிபதிகள் கூறினர்.

உச்சநீதிமன்றம்
மணமுடித்த முதல்நாள் இரவே துடிக்கதுடிக்க மனைவியை கொன்ற கணவன்; ரத்த வெள்ளத்தில் முடிந்த காதல்திருமணம்!

தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை இடைக்காலமாக நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com