“என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள்?” - பயிற்சி மருத்துவர் கொலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கேள்வி!

பல மருத்துவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் 36 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வேலை வாங்கப்படுகின்றனர். இது மிகவும் கவலை அளிக்கிறது. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அமைத்துள்ள குழு, மருத்துவரின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்
உச்ச நீதிமன்றம் - கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு
உச்ச நீதிமன்றம் - கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்குpt web
Published on

‘ஏழை மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது..’

கொல்கத்தா மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் இன்று இரண்டாவது நாளாக விசாரணையை மேற்கொண்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் மீது நிர்வாகங்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “போராட்டத்தில் ஈடுபடக்கூடிய மருத்துவர்கள் பணிக்கு வருவதை உறுதி செய்யவில்லை என்றால் அவர்கள் விடுப்பு எடுத்தவர்களாகத்தான் கருதப்படுவார்கள். மருத்துவமனை நிர்வாகங்களை, போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு வருகைப் பதிவு கொடுங்கள் என்று எங்களால் சொல்ல முடியாது” என தெரிவித்தார். இத்துடன் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள் மீண்டும் தங்களது பணிகளுக்கு திரும்ப வேண்டுமென உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல் கொடுத்ததோடு, “ஏழை மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது” என தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம் - கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு: சூதுபவள மணியில் சீறும் திமிலுள்ள காளை பதக்கம் கண்டெடுப்பு!

சிபிஐ மற்றும் காவல்துறை விசாரணை அறிக்கை தாக்கல்

மேலும் பேசிய அவர், “பல மருத்துவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் 36 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வேலை வாங்கப்படுகின்றனர். இது மிகவும் கவலை அளிக்கிறது. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அமைத்துள்ள குழு, மருத்துவரின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் சிபிஐ மற்றும் கொல்கத்தா காவல்துறை சார்பில் முதல் கட்ட விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கொல்கத்தா மருத்துவர் கொலை - உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்
கொல்கத்தா மருத்துவர் கொலை - உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்

சிபிஐ சார்பில் ஆஜரான மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர், “கொல்கத்தா மருத்துவமனையில் சம்பவம் நடந்து ஐந்தாவது நாள் நாங்கள் விசாரணைக்காக சென்றபோது குற்றம் நடந்த இடம் மாற்றப்பட்டிருந்தது. உடல் தகனம் நடந்ததற்கு பிறகுதான் முதல் எஃப் ஐ ஆர் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

முதலில் உயிரிழந்த பெண்ணின் பெற்றோரிடம் தற்கொலை என சொல்லி இருக்கிறார்கள். பிறகும் மரணம் என்று மட்டும்தான் சொல்லி இருக்கின்றார்கள். அதன் பிறகு ‘இதில் பின்னணியில் ஏதோ சதி இருக்கிறது’ என்று இறந்த மாணவியுடன் படித்த மருத்துவர்களும் நண்பர்களும் அனைத்து விவகாரத்தையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்கள்” என உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம் - கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு
1976-க்கு பிறகு முதல்முறை.. 15 வருடத்திற்கு பின் முதல்வீரர்.. PAK படைத்த சாதனை! 448 ரன்கள் குவிப்பு!

மருத்துவமனை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது

அப்போது சிபிஐ மற்றும் கொல்கத்தா காவல்துறையை சார்பில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். பின் பேசிய தலைமை நீதிபதி,

ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய இரவில்தான் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டிருக்கின்றார். ஆனால் குற்றம் நடந்த விவரங்கள் ஆகஸ்ட் 9ம் தேதி காலை 10.10 மணிக்குதான் காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு நீண்ட நேரம் காவல்துறைக்கு விஷயத்தை சொல்லாமல் மருத்துவமனை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது? உண்மையில் இது எங்களுக்கு ஆழ்ந்த கவலையை அளிக்கிறது” எனக் கூறினார்.

சந்திரசூட்
சந்திரசூட்

மேலும், “ஆகஸ்ட் 9-ம் தேதி மாலை 6.10 மணிக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. அதுவும் இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்தார் என்ற காரணத்தை கூறி பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்தார் என்ற அந்த விபரம் அன்று இரவு 11:30 மணி வரையும் காவல்துறைக்கு அனுப்பப்படாமல் இருந்திருக்கிறது. இவையெல்லாம் நிச்சயம் கவலை அளிக்கக் கூடிய தகவல்கள். இதற்கு மேற்கு வங்க காவல்துறையால் உரிய பதிலளிக்க முடியவில்லை என்றால் பதிலளிப்பதற்கு பொறுப்பான நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என மேற்குவங்க மாநில அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம்

கொல்கத்தா மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தை, கொல்கத்தா காவல்துறை கையாண்ட விதம் கிரிமினல் நடைமுறை சட்டங்களுக்கு முழுமையாக எதிராக இருக்கிறது என உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் தனது வாழ்நாளில், காவல்துறை இப்படி நடைமுறைகளை தவறாக கையாண்டதை தான் பார்த்ததே கிடையாது என உச்ச நீதிமன்ற நீதிபதி பர்த்திவாலா கடும் கண்டனம் தெரிவித்தார்

குற்றம் நடந்த இடம் குற்றம் நடந்த பிறகு 18 மணி நேரத்திற்கு பிறகுதான் காவல்துறையினரது கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. அதுவும் பிரேத பரிசோதனை எல்லாம் நடந்து முடிந்ததற்குப் பிறகுதான்” என உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

பிரேத பரிசோதனையில் 150 கிராம் விந்தணு இருப்பதாக குறிப்பிடப்படுவதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்தார். “எங்களிடம் பிரேத பரிசோதனை அறிக்கை இருக்கிறது. சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை நீதிமன்றத்தில் யாரும் கொண்டு வர வேண்டாம்” என அவர் காட்டமாக கூறியுள்ளார். “பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ள 150 கிராம் எதைக் குறிக்கிறது என்பதும் எங்களுக்கு தெரியும்” எனவும் தலைமை நீதிபதி பதிலளித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் - கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு
Vaazhai review | வாழை விமர்சனம் | மாரியின் நினைவிலிருந்து ஒரு வலி மிகு காவியம்!

“மருத்துவர்கள் பணிக்கு திரும்புவார்கள் என நம்புகிறோம்”

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த காலங்களில் நடந்த போராட்டங்கள் தொடர்பாக அவர்களில் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மருத்துவர்களால் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தலைமை நீதிபதி, “அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் மருத்துவர்கள் போராட்டத்திற்கு போகக் கூடாது. நீங்களே சொல்லுங்கள்... நாங்கள் (நீதிபதிகள், வழக்கறிஞர்கள்) நீதிமன்ற வேலைகளை தவிர்த்து விட்டு உச்ச நீதிமன்றத்தின் எதிரே போராட்டத்தை நடத்தலாமா? ஒருவேளை அப்படி செய்தால் அது பணிக்கு மட்டும் இல்லை.... அரசியல் சாசனத்திற்கே எதிரானதாகும்.

எனவே மருத்துவர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த உத்தரவுக்கு பிறகு பணிக்குத் திரும்பும் மருத்துவர்கள் மீது எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாது. இதுகுறித்து எங்களிடத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.

சிபிஐ
சிபிஐட்விட்டர்

தொடர்ந்து, “குறிப்பாக நீதித்துறையும், மருத்துவத்துறையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடியாது. இவற்றை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போது இருக்கும் இக்கட்டான நிலைமையை அரசியல் ஆக்காதீர்கள். சட்டம் அதன் கடமையை நிச்சயம் செய்யும்.

நாங்கள் மருத்துவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் அக்கறை கொண்டுள்ளோம். நாங்கள் நடைமுறைப்படுத்தக்கூடிய வழிகாட்டுதல்களை அனுப்புவோம். அதையடுத்து அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இருப்பினும் இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் கொல்கத்தா காவல் துறை ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தட்டும்” என குறிப்பிட்டார்

உச்ச நீதிமன்றம் - கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு
கொல்கத்தா மருத்துவர் கொலை| கண்டெடுக்கப்பட்ட டைரி.. கிழிக்கப்பட்ட பக்கங்கள்.. சூடுபிடிக்கும் விசாரணை!

விசாரணையை ஒத்திவைத்த நீதிபதிகள்

இத்துடன், “மருத்துவர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து தெரிவிக்கும் வகையில் ஒரு பாதுகாப்பு இணையதளத்தை தேசிய அளவில் உருவாக்கலாம். இதுகுறித்த நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எடுக்க வேண்டும். மேலும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது. அதேப்போன்று அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொள்பவர்கள் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்க கூடாது. இதில் உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட விதிகளின் படி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என திட்டவட்டமாக தெரிவித்தார்

தொடர்ந்து, “அனைத்து மாநில அரசுகளும் இந்த விவகாரத்தில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும். போரட்டத்தை கைவிட்டு பணிக்கு செல்லும் மருத்துவர்கள் மீது நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுத்தால், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதில் மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர், மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் மாநில காவல்துறை இயக்குனர்கள் ஆகியோர் தரப்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதுகுறித்த நடவடிக்கைகளை அடுத்து இரண்டு வாரத்திற்குள் எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com