காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகினாரா சசிதரூர்? ராகுல் காந்தி கொடுத்த விளக்கம்!

காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகினாரா சசிதரூர்? ராகுல் காந்தி கொடுத்த விளக்கம்!
காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகினாரா சசிதரூர்? ராகுல் காந்தி கொடுத்த விளக்கம்!
Published on

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில், மல்லிகார்ஜூன கார்கேவும் சசி தரூரும் போட்டியில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிட மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாள் ஆகும். இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான பொறுப்பாளர் மதுசூதன் மிஸ்த்ரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் ஆகிய இருவரும் போட்டியில் இருப்பதாக மிஸ்த்ரி கூறினார்.

இதனிடையே, ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், `தலைவர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், அவர்கள் தங்கள் குடும்பத்தின் கைப்பாவையாக இருக்க மாட்டார்கள்’ என்று குறிப்பிட்டார்.

இதனிடையே, சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து தாம் விலகி விட்டதாக வதந்திகள் பரவியதாகக் குறிப்பிட்ட சசிதரூர், அதை மறுத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com