"மிக்கி மவுஸ்" என காந்தி செல்லமாக அழைத்த சரோஜினி நாயுடு - பிறந்த நாள் பகிர்வு

"மிக்கி மவுஸ்" என காந்தி செல்லமாக அழைத்த சரோஜினி நாயுடு - பிறந்த நாள் பகிர்வு
"மிக்கி மவுஸ்" என காந்தி செல்லமாக அழைத்த சரோஜினி நாயுடு - பிறந்த நாள் பகிர்வு
Published on

'இந்தியாவின் நைட்டிங்கேல்,' ‘கவிக்குயில்’ என்று புகழப்பட்ட கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10.

* சரோஜினி நாயுடு 1879 பிப்ரவரி 13 அன்று ஹைதாராபாத்தில் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். சரோஜினி நாயுடுவின் பிறந்த நாள் இந்தியாவில் தேசிய மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

* சென்னை பல்கலைக்கழக மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்றபோது அவருக்கு 12 வயது. சரோஜினி  கணித மேதை அல்லது விஞ்ஞானி ஆகவேண்டும் என்பது தந்தையின் ஆசை. இவருக்கோ கவிதை எழுதுவதில் நாட்டம். ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

* சரோஜினியின் படைப்புகளால் கவரப்பட்ட ஹைதராபாத் நிஜாம், வெளிநாடு சென்று படிக்க உதவித் தொகை வழங்கினார். லண்டன் கிங்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் பயின்றார். உருது, தெலுங்கு, ஆங்கிலம், பாரசீகம், பெங்காலி ஆகிய மொழிகளைப் பேச சரோஜினி நாயுடு கற்றுக்கொண்டார்.

* கவிதைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் அவற்றின் ஆன்மா இந்தியாவாகவே இருந்தன. The Golden Threshold,  The Bird of Time, The Broken Wing குறிப்பிடத்தக்கவை.

* 1905-ம் ஆண்டில் வங்காளம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சரோஜினி இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநாத் தாகூர், முகம்மது அலி ஜின்னா, அன்னி பெசண்ட், காந்தி,  நேரு ஆகியோரின் அறிமுகத்தைப் பெற்றார்.

* 1925-ம் ஆண்டில் சரோஜினி காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே ஆவார்.

* சரோஜினி அடிப்படையில் காந்தியின் வழியை பின்பற்றினார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.

* ஜனவரி 26, 1930-ல் தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் கோரியது. மே 5, அன்று கைது செய்யப்பட்டார். அதன் பின் சில நாட்களிலேயே நாயுடு அவர்களும் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

* காந்தி மற்றும் பண்டிட் மாலவியாஜி ஆகியோருடன் இணைந்து வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றார். அக்டோபர் 2, 1942-ம் ஆண்டு அவர் வெள்ளையனே வெளியேறு போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டார். அவர் காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். மோகன்தாஸ் காந்தி அவர்களுடன் நாயுடு அவர்கள் ஒரு பாசமான உறவினைக் கொண்டிருந்தார். காந்தி அவரை செல்லமாக "மிக்கி மவுஸ்" என்று அழைப்பார்.

* 1947-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய உறவுகள் மாநாட்டில் நாயுடு பங்கேற்றார். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15-ம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு சரோஜினி நாயுடு  உத்தரப்பிரதேசம் மாநில ஆளுனராக பதவியேற்றார். இதன்மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆளுனர் ஆனார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் சரோஜினி நாயுடு காலமானார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com