சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கு தொடர்பாக பா.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மூத்த வழக்கறிஞராக உள்ளார். இவர் சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில், அந்நிறுவனத்திற்காக ஆஜராகி வாதாடினார். இதற்கு கட்டணத்தொகையாக நளினிச் சிதம்பரம் ரூ.1 கோடி பெற்றதாக அப்போது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது.
அந்த சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை நீக்கவேண்டும் என அமலாக்கதுறை சார்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இதற்கு முன் பிறப்பித்த உத்தரவிற்கு தடைவிதித்த நீதிமன்றம், தற்பொது புதிய சம்மன் ஒன்றை நளினிச் சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி மே 7ஆம் தேதி நளினி சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் புதிய சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.