கேரளா | கணவரை தொடர்ந்து தலைமைச் செயலாளராக பதவியேற்ற மனைவி... யார் இந்த வேணு - சாரதா முரளிதரன்?

கேரளாவில் தலைமை செயலாளராக இருந்தவர் வி வேணு. இவர் ஓய்வு பெற்ற நிலையில், அந்தப் பதவிக்கு இவரின் மனைவி சாரதா முரளிதரன் நியமிக்கப்பட்டு, பதவியேற்றும் உள்ளார்.
சாரதா முரளிதரன் - வேணு
சாரதா முரளிதரன் - வேணுஎக்ஸ் தளம்
Published on

கணவன் மனைவி இருவரும் ஒரே மாதிரியான பதவியில் / பணியில் இருக்கும் பல குடும்பங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் அரசாங்கத்தின் அதிமுக்கிய பதவியான மாநில தலைமைச்செயலர் பொறுப்பை கணவனும் மனைவியும் அலங்கரித்ததை என்றாவது கேள்விப்பட்டதுண்டா? அப்படியொரு வரலாற்று நிகழ்வுதான் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

ஒரு நேரத்தில் இருவரும் தலைமை செயலாளர் ஆக முடியாதே என நீங்கள் யோசிப்பது சரிதான். ஒரு சின்ன திருத்தம். கணவன் தலைமை செயலாளராக இருந்த நிலையில், அவரது ஓய்வுக்குப் பிறகு மனைவிக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. யார் இந்த தம்பதி? பார்க்கலாம்...

சாரதா முரளிதரன் - வேணு
சாரதா முரளிதரன் - வேணு

கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்தவர் வேணு. இவர் கேந்திரிய வித்யாலயாவில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மலபார் கிறிஸ்தவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார். அதன்பிறகு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, திருச்சூர் மாவட்ட ஆட்சியராக தனது பணியைத் தொடங்கினார். அதன்பிறகு பினராயி விஜயன் ஆட்சியில் தலைமைச் செயலாளராகப் பணியை ஏற்றுக்கொண்டார்.

இவரது மனைவி சாரதா முரளிதரனும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. இவர் 2006 முதல் 2012 வரை கேரளாவின் லட்சிய வறுமை ஒழிப்புத் திட்டமான குடும்பஸ்ரீ மிஷனுக்குத் தலைமை தாங்கியதற்காகப் புகழ் பெற்றவர். பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்தும் பல்வேறு முயற்சிகளையும் சாரதா முன்னெடுத்துள்ளார்.

வேணு - சாரதா முரளிதரன்
வேணு - சாரதா முரளிதரன்

இவர்களில் பினராயி விஜயன் ஆட்சியில் தலைமைச் செயலாளாராகப் பணியாற்றிய வேணுவின் பதவி காலம் கடந்த ஆகஸ்ட் 31 உடன் முடிந்த நிலையில், அந்த பதவிக்கு வேணுவின் மனைவி சாரதா முரளிதரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

சாரதா முரளிதரன் - வேணு
கேரளா | மோகன்லால் உட்பட 15 உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா - புயலைக் கிளப்பிய ஹேமா கமிட்டி அறிக்கை!

தன் பதவிக்காலம் முடிந்ததும், தலைமைச் செயலாளாராக பணியாற்றயிருக்கும் தனது மனைவியான சாரதா முரளிதரனிடம் மாநிலத்தின் பொறுப்புகளை வேணு ஒப்படைத்தார். இந்நிகழ்வு கேரள வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com