மக்களவை எம்பி சன்வர்லால் காலமானார்

மக்களவை எம்பி சன்வர்லால் காலமானார்
மக்களவை எம்பி சன்வர்லால் காலமானார்
Published on

பாரதிய ஜனதா எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான சன்வர்லால் ஜாட் டெல்லியில் இன்று அதிகாலை காலமானார்.

அவருக்கு வயது 62. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வான சன்வர்லால், 2014ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டு வரை நீர்வளத் துறை இணையமைச்சராக இருந்தார். கடந்த மாதம் 29ம் தேதி ஜெய்ப்பூரில் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் சன்வர்லால் பங்கேற்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவருக்கு ஜெய்ப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சன்வர்லால் மாற்றப்பட்டார். மாரடைப்பு ஏற்பட்ட அவருக்கு மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனால் அவருக்கு செயற்கை சுவாசத்துடன் கூடிய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று அதிகாலை மரணமடைந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com