நீட் வினாத்தாள் ஒன்றுக்கு ரூ.40 லட்சம்.. யார் இந்த சஞ்சீவ் முகியா..? தோண்ட தோண்ட வெளிவரும் மர்மங்கள்

நீட் தேர்வு முறைகேட்டின் பின்னணியில் பீகாரைச் சேர்ந்த சஞ்சீவ் முகியா என்பவர் மூளையாக செயல்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 40 லட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு, விண்ணப்பதாரர்களுக்கு நீட் வினாத்தாளை விற்றுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நீட்
நீட்pt web
Published on

யார் இந்த சஞ்சீவ் முகியா?

நீட் தேர்வு வேண்டவே வேண்டாம் என தமிழக அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூழலில், அண்மையில் அந்தத் தேர்வில் நடந்த முறைகேடுகள் நாட்டையே அதிர வைத்துள்ளன. 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது, வினாத்தாள் கசிவு என பிரச்னை பூதாகரமாக வெடித்ததால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது மத்திய அரசு. இது ஒருபுறம் இருக்க, காவல்துறை விசாரணையில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டவர் பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சீவ் முகியா என்கிறது காவல்துறை.

நீட் தேர்வு
நீட் தேர்வுமுகநூல்

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார் இந்த சஞ்சீவ். பெயருக்கு, கல்லூரி ஒன்றில் தொழில்நுட்ப உதவியாளராக தன்னைக் காட்டிக் கொண்ட சஞ்சீவ் முகியா, முழுக்க முழுக்க வினாத்தாள் முறைகேட்டையே தனது தொழிலாக செய்து வந்திருக்கிறார்.

2016ஆம் ஆண்டு பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில், வினாத்தாளை கசியவிட்டு, காவல்துறையிடமும் அவர் சிக்கியிருக்கிறார். சஞ்சீவ் முகியாவின் மகனான சிவக்குமார் ஒரு மருத்துவர். ஆனால் தற்போது அவர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணமும், பீகாரில் நடந்த ஆசிரியர் தேர்வு வினாத்தாளை கசியவிட்டதுதான் என்று கூறுகிறது காவல்துறை தரப்பு. இப்படி தந்தை, மகன் என இருவருமே வினாத்தாளை கசியவிட்டு கல்லா கட்டுவதில் குறியாக இருக்க, அவர்களுக்கு பக்கபலமாக சஞ்சீவ்வின் மனைவி மம்தா தேவி இருப்பதாக அம்மாநில எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

நீட்
”ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; நீட் தேர்வை ரத்து செய்க” - பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்!

வினாத்தாள் ஒன்றிற்கு ரூ.40 லட்சம்

மம்தா தேவி, ஒரு அரசியல்வாதி. 2020ஆம் ஆண்டு பீகார் சட்டப்பேரவை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். அவர், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை சந்தித்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, சஞ்சீவ் முகியாவை பாதுகாப்பது யார் என்றும், அவரது மனைவி தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டது குறித்தும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

நீட் தேர்வு முறைக்கேடு
நீட் தேர்வு முறைக்கேடுமுகநூல்

இது ஒருபுறம் இருக்க, நீட் தேர்வு முறைகேட்டில் சஞ்சீவ் முகியா பின்னணியில் ஒரு கும்பலே செயல்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதலில் சஞ்சீவ்விடம்தான், பேராசிரியர் ஒருவர் மூலம் செல்போனில் நீட் வினா மற்றும் விடைத்தாளை அனுப்பியதாகவும், அங்கிருந்து இந்த முறைகேடு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. தேர்வு நடைபெற்ற மே 5ஆம் தேதிக்கு முந்தைய நாளில், வினாத்தாளை 25 விண்ணப்பதாரர்களுக்கு வழங்கியிருக்கும் இந்தக் கும்பல், இதற்காக நபர் ஒருவரிடம் 40 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது.

நீட்
சனாதனம் குறித்து சர்ச்சை பேச்சு – அமைச்சர் உதயநிதிக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

இப்படி தோண்ட தோண்ட வெளிவரும் ஒவ்வொரு தகவலும் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்க, விசாரணை வளையத்தை விரிவுபடுத்தியுள்ளது காவல்துறை.

நீட்
பூதாகரமான நீட் முறைக்கேடு.... முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வும் ஒத்திவைப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com