வாரணாசியில் உள்ள இந்து பல்கலைக்கழக எம்.ஏ.வரலாற்று தேர்வில் முத்தலாக் மற்றும் அலாவுதீன் கில்ஜி குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
வாரணாசியில் உள்ளது பனாரஸ் இந்து பல்கலைக்கழகம். தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் தேர்வு நடைப்பெற்று வருகிறது. எம்.ஏ.வரலாற்று தேர்வில் முத்தலாக் மற்றும் அலாவுதீன் கில்ஜி தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்கள் மீது சித்தாந்தத்தை திணிக்க முயல்வதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக பனாராஸ் இந்து பல்கலைக்கழக பேராசிரியர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் இடைக்கால வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்கும்போது இந்த விஷயங்கள் ஒரு பாடப்பகுதியாக வரும் என தெரிவித்துள்ளார் . ஸ்ரீவஸ்தவா மேலும் கூறும்போது, உண்மையான வரலாற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள, அவர்களுக்கு சில விஷயங்களை கற்பிக்க வேண்டும். மாணவர்கள் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அப்படிப்பட்ட விஷயங்களை அவர்கள் எப்படி தெரிந்து கொள்வார்கள்?. இஸ்லாம் பற்றிய வரலாற்றை கற்பிக்கும்போது, முத்தலாக் மற்றும் அலாவுதீன் கில்ஜி பற்றிய விஷயங்களை கற்பிப்போம். சஞ்சய் லீலா பன்சாலி போன்றோர் மாணவர்களுக்கு வரலாற்றை கற்றுக் கொடுக்க மாட்டார்கள்’ என அவர் தெரிவித்தார்.