புதிதாக அமல்படுத்த இருக்கும் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் சானிடரி நாப்கினுக்கு முழுவதுமாக வரி விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு மேனகா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், பெண்களின் அத்தியாவசிய பொருளான சானிடரி நாப்கினுக்கு நூறு சதவீதம் வரி விலக்கு வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கையெழுத்து இயக்கம் நடத்திய காங்கிரஸை சார்ந்த மக்களவை எம்.பி. சுஷ்மிதாதேவ் மேனகா காந்தியிடம் நேற்று அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.