இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி தோனி நேற்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின் போது அவருடன் தோனியும், மகள் ஷிவாவும் இருந்துள்ளனர். அந்த படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் சாக்ஷி ஷேர் செய்துள்ளார்.
தோனியும், சாக்ஷியும் கடந்த 2010 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள் ஷிவாவிற்கு ஐந்து வயதாகிறது. இந்த கொண்டாட்டத்தில் தோனி மகளை தூக்கியபடி போட்டோவுக்கு உற்றார், உறவினர்களுடன் போஸ் கொடுத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி 14 போட்டிகளில் 200 ரன்களை குவித்திருந்தார். இந்நிலையில் வரும் 2021 ஐபிஎல் தொடரில் தோனியை சென்னை அணியிலிருந்து கழட்டி விட வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.