எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு ‘யுவ புரஷ்கார்’விருது

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு ‘யுவ புரஷ்கார்’விருது
எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு ‘யுவ புரஷ்கார்’விருது
Published on

இந்திய மொழிகளின் இலக்கியமும், இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்திய அரசின் ஆதரவுடன், தன்னாட்சி அமைப்பாக 12 மார்ச் 1954 அன்று துவக்கப்பட்டது சாகித்ய அகாடமி. வெளிநாட்டு மற்றும் இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த இலக்கியப் படைப்புகளை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, இந்திய மொழிகளில் வெளியான சிறந்த படைப்புகளுக்கு ஆண்டு தோறும் ரொக்கப் பரிசுடன் கூடிய விருது அளித்து ஊக்கப்படுத்துவது, சிறுவர் இலக்கியங்களையும், சிறுபான்மையினர் பேசும் மொழிகளை ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை இந்நிறுவனம் செய்து வருகிறது.

இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்கு தற்போது சாகித்ய அகாடமி விருதுடன் ரூபாய் ஒரு இலட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. அதேபோல், 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் சிறந்த மொழி பெயர்ப்பு நூல்கள், கதைகள், புதினங்கள் மற்றும் கவிதைகள் போன்ற இலக்கியப் படைப்புகளுக்கு 2011ஆம் ஆண்டு முதல் யுவ புரஸ்கார் விருது ரொக்கத்துடன் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டிற்கான யுவ புரஷ்கர் விருது பெறுவோர் சாகித்ய அகாடமி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மொழி பிரிவில் ‘அம்பு படுக்கை’ என்ற சிறுகதை நூலுக்காக எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு 2018ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி ‘யுவ புரஷ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதும், ரொக்க தொகையாக ரூ50 ஆயிரமும் அவருக்கு வழங்கப்படும்.  

‘சிறகு முளைத்த யானை’ கவிதை நூல் தொகுப்புக்காக எழுத்தாளர் கிருங்கை சேதுபதிக்கு 2018ம் ஆண்டிற்கான பால சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com