"பக்தியெனும் மொழியில் பாடுவதை கேட்க விருந்தாக இருந்தது”- விருப்ப பாடலை பாடியவருக்கு சத்குரு பாராட்டு

கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரபல பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன், சத்குருவை சந்தித்து பேசினார். அப்போது அவரது விருப்ப பாடலான ஆதிசங்கரர் எழுதிய “நிர்வாண ஷடக”த்தை பாடி காட்டினார். இதற்கு சத்குருவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
sadhguru and CassMae
sadhguru and CassMaept
Published on

சமூக வலைதளத்தில் மிகவும் புகழ் பெற்றிருப்பவர் ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், இந்திய கர்நாடக பாடல்களை பாடி காணொளி வெளியிடுவதில் மிகவும் பிரபலமானவர்.

இதற்கிடையே, இந்தியாவிற்கு முதன் முறையாக வருகை தந்திருக்கும் இவர், கோவை ஈஷா யோகா மையத்திற்கு நேரில் சென்று சத்குருவை சந்தித்து பேசினார். அப்போது, ஆன்மிகத்தில் ஆழங்கால் பட்ட ஆதி சங்கராச்சாரியார் இயற்றிய சமஸ்கிருத பாடல் “நிர்வாண ஷடகத்தை” சத்குருவிற்கு பாடி அர்ப்பணித்தார். அவருடைய பக்திக்கு பெருமை சேர்க்கும் விதமாக சத்குருவும், மலர் மாலையை அணிவித்து ஆசி வழங்கினார்.

இந்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சத்குரு “நமஸ்காரம் கசாண்ட்ரா! ஈஷா யோகா மையத்திற்கு வந்தது அற்புதமானது மற்றும் பக்தி என்ற தடைகள் ஏதும் அறியாத மொழியில் நீங்கள் பாடுவதை கேட்பது சிறந்த விருந்தாக இருந்தது. குறையைக்கூட நிறைவானதாக மாற்ற முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உங்களுக்கு என் வாழ்த்துகளும் & ஆசியும்”என பாராட்டு தெரிவித்துள்ளார்.

sadhguru and CassMae
முனைவர் பட்டம் பெற்றிருப்பதாக போலி ஆவணங்களைக் காட்டி மோசடி - V3 online TV உரிமையாளர் விஜயராகவன் கைது

இதற்கு பதில் பதிவை போட்டுள்ள “வாவ்.. நான் கேட்டதிலேயே மிகவும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் இவை. உங்களோடு இருந்த தருணங்களை எண்ணி மகிழ்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கசாண்ட்ரா, “நான் ஜெர்மனி திரும்பி செல்கையில், இந்தியாவின் அனைத்து நினைவுகளையும் என்னுள் வைத்துக்கொள்வேன். அதைகொண்டு நிறைய பாடல்களை உருவாக்குவேன்” என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

sadhguru and CassMae
மதுரை: குடும்பத் தகராறில் கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு... பறிபோன 4 உயிர்கள் - நடந்தது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com