'பாரத ரத்னா' விருதுக்கு சச்சின் தகுதியில்லாதவர்: பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி. காட்டம்..

'பாரத ரத்னா' விருதுக்கு சச்சின் தகுதியில்லாதவர்: பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி. காட்டம்..
'பாரத ரத்னா' விருதுக்கு சச்சின் தகுதியில்லாதவர்: பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி. காட்டம்..
Published on

'சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா விருதுக்கு தகுதியில்லாதவர்' என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.பி. ஜஸ்பீர் கில் விமர்சித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக சர்வதேச பிரபலங்களான பாடகி ரியானா, கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் ட்விட்டரில் கருத்து வெளியிட்டனர். பொதுவாக நாட்டின் முக்கிய விவகாரங்களில் அமைதி காக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வெளிநாட்டு பிரபலங்களைக் கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டார். ‘வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாகத்தான் இருக்க வேண்டுமே தவிர உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது’ என பதிலடி கொடுத்தார். சச்சினின் இக்கருத்து ட்விட்டரில் பெரும் புயலைக் கிளப்பியது.

மேலும் அரசியல் வட்டாரத்திலும் சச்சினின் பதிவுக்கு அதிருப்தியும் ஆதரவும் எழுந்துள்ளது. ‘மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும்’ என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஜஸ்பீர் கில், “சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னாவுக்கு தகுதியானவர் அல்ல. ஏதோவொன்றை எதிர்பார்த்து அரசுக்கு ஆதரவாக ட்வீட் செய்கிறார். அவர் தனது மகன் அர்ஜுனை ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் தேர்வு செய்ய விரும்பினார். சச்சின் பாரத ரத்னாவுக்கு தகுதியானவரா என்பதை தீர்மானிக்க இதை பொதுமக்களிடம் விட்டுவிட விரும்புகிறேன்’’ என்று விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறுகையில், “பாஜக ஆளும் மத்திய அரசு பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை வற்புறுத்தி ரியானாவுக்கு எதிராக ட்வீட் போட வைத்துள்ளது. இது போல தேசிய அடையாளம் கொண்டோரை அரசு தங்கள் விளம்பரத்துக்காக தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அக்‌ஷய் குமார் போன்றோ இந்த பணிக்குப் பொருத்தமாக இருப்பார்கள்.

ஆனால் பாரத ரத்னா விருது பெற்றோரைக் கட்சி விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை விடுத்து ஏதேனும் முக்கியமான விவகாரங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் பின்னடைவைச் சந்தித்துள்ள லதா மங்கேஷ்கர் மற்றும் சச்சின் ஆகியோர் கிண்டலுக்கு உள்ளாகின்றனர். இதற்கு அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். அவர்கள் மிகவும் எளிமையான குணம் கொண்டவர்கள். அவர்கள் வேறு யாரோ சொன்னதைப் பின்பற்றி உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com