மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தரிசனத்தின்போது சுமார் 263 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ஆம் தேதி திறக்கப்பட்ட சபரி மலை ஐயப்பன் கோயிலின் நடை நேற்று அதிகாலையில் சாத்தப்பட்டது. இந்தக் காலக்கட்டத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இந்நிலையில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின்போது சுமார் 263 கோடி 46 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கிடைத்த வருமானத்தை விட 95 கோடியே 35 லட்சம் அதிகமாகும். சபரிமலை கோயில் நடை, மலையாள கும்ப மாத பூஜைக்காக பிப்ரவரி 13-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.