‘சபரிமலையில் மகரஜோதி’ - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

‘சபரிமலையில் மகரஜோதி’ - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
‘சபரிமலையில் மகரஜோதி’ - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Published on

சபரிமலையில் இந்தாண்டு மகரஜோதியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். 

சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 14ஆம் தேதியும் ஜோதி வடிவாக ஐயப்பன் காட்சியளிப்பார் என்ற ஐதீகத்தால், இந்தாண்டும் சபரிமலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். மகா தீப வழிபாட்டைக் காணவும், பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியாகத் தெரியும் ஐயப்பனை தரிசிக்கவும், சன்னிதானம், பம்பை மற்றும் பெரியானைவட்டம், பாண்டித்தாவளம் பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் காத்திருந்தனர்.

சபரிமலை சன்னிதானம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, மகர ஜோதிக்காக மாலையில் நடை திறக்கப்பட்டது. பின்னர், ஐயப்பனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பந்தன அரண்மனையிலிருந்து 40 பேர் சுமந்து வந்த திருவாபரணங்கள் சன்னிதானத்தை அடைந்தன. 

ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மகர தீப வழிபாடு நடத்தப்பட்டதைத்தொடர்ந்து, பொன்னம்பலமேட்டிலிருந்து தென்பட்ட மகர ஜோதியை ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வழிபட்டனர். அதன் பிறகே 18 படிகள் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, ஐயப்பனை தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து மகர சங்கராந்தி பூஜை, மகர சங்ரம பூஜைகள் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்ததையொட்டி, சபரிமலையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மகர ஜோதி தரிசன விழாவைத் தொடர்ந்து வரும் 20ஆம் தேதி சபரிமலையின் நடை அடைக்கப்பட இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com