மாதாந்திர பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு - திரளான பக்தர்கள் தரிசனம்

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு - திரளான பக்தர்கள் தரிசனம்
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு - திரளான பக்தர்கள் தரிசனம்
Published on

தமிழ் மாதத்தின் புரட்டாசி  மற்றும் மலையாள கன்னி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மலையாள கன்னி மாதம் மற்றும் தமிழ் மாதத்தின் புரட்டாசி  பூஜைக்காக  வெள்ளிக்கிழமை  மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபம் காட்டினார்.

சபரிமலை தரிசனத்திற்காக "வெர்ச்சுவல் கியூ" மூலம் ஆன்லைன்  முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல் பகுதியில் உள்ள நேரடி முன்பதிவு மையங்களில் பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களின் தரிசனம் முடிந்து வரும் செப்டம்பர் 21ம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட உள்ளது.

இதையும் படிக்க: இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் இந்தியா- பூடான் நுழைவு வாயில்கள் திறப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com