ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வரவுள்ள நிலையில், இரு நாட்டுக்கும் இடையே எஸ்-400 ரக ஏவுகணை அமைப்பை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்திருப்பதால், அந்நாட்டிடம் இருந்து ராணுவ தளவாடங்களை இந்தியா கொள்முதல் செய்யக் கூடாது என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. மேலும் ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளும் நாடுகள் மீதும் தடை விதிக்கப் போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அதே சமயம் ரஷ்யா மீது தடைகள் விதிப்பதற்கு முன்னதாகவே எஸ்-400 ரக ஏவுகணை அமைப்பை கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், இதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என இந்தியா கோரியிருந்தது.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். அப்போது சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் இரு நாட்டுக்கும் இடையே கையெழுத்தாகவுள்ளளதாக, ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.