உக்ரைனின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில், உக்ரைன் முழுவதும் மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கி ஆயிரமாவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று 120 ஏவுகணைகள், 90 ஆளில்லா விமானங்கள் மூலம் மின் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எனினும் 140 வான் இலக்குகளை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், மிக்கோலாயில் ஆளில்லா விமான தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலால் அனல் மின் நிலையங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அண்டை நாடான போலந்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது