குஜராத்| பட்டேல் சிலைக்கு செல்லும் வழியில் ரூ.70 கோடியில் சாலை..வெள்ளத்தில் துண்டு துண்டான பரிதாபம்!

குஜராத் வெள்ளத்தில் ரூ.70 கோடி செலவில் 19 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்ட வதோதரா சாலை அடித்துச் செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் வதோதரா சாலை
குஜராத் வதோதரா சாலைஎக்ஸ் தளம்
Published on

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக, அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. வதோதரா, தேவபூமி துவாரகா, ஜாம்நகர் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை தொடர்பான நிகழ்வுகளால் அம்மாநிலத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே வதோதராவில் குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் முதலைகள் புகுந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின. அதில் சில பிடிக்கப்பட்டிருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கட்ச் மற்றும் அதை ஒட்டியுள்ள பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த புயலுக்கு 'அஸ்னா' என பாகிஸ்தான் பெயரிட்டு இருக்கிறது. இதனால் கனமழை மேலும் தீவிரமடையும் பட்சத்தில், குஜராத்தின் வெள்ளப் பாதிப்பு மேலும் மோசமாகும் நிலை உருவாகியிருக்கிறது.

இதையும் படிக்க: ’மன்னிக்கவும் அம்மா.. மிஸ் யூ’| தாயைக்கொன்று ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர்..குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்!

குஜராத் வதோதரா சாலை
கனமழையால் முடங்கிய குஜராத் மாநிலம்...

இந்த நிலையில் வதோதராவில் இருந்து சர்தார் வல்லபாய் பட்டேலின் ஒற்றுமை சிலைக்குச் செல்லும் சாலை கனமழையால் பாதிக்கப்பட்டு துண்டுதுண்டாகக் காட்சியளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மே மாதம் போடப்பட்ட இந்தச் சாலை தற்போதைய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. ரூ.70 கோடி செலவில் 19 கி.மீ நீளத்திற்கு இச்சாலை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இந்தச் சாலைப் பணியின்போது ஊழல் நடந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு மகராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்தாண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்துவிழுந்து முற்றிலும் சேதமடைந்தது. அப்பகுதியில் கடந்த சில நாட்களாகப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில்தான் சிவாஜியின் சிலை கீழே விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதில் ஊழல் நடந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன. இதுதொடர்பாக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரத்து செய்யப்பட்ட பிரஷர் குக்கர்.. 2 ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்த அமேசான்..பயனரின் பதிவு வைரல்!

குஜராத் வதோதரா சாலை
குஜராத் கனமழை: வெள்ளத்தில் நகருக்குள் அடித்து வரப்பட்ட முதலை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com