காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த உரையில், “காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. காஷ்மீரில் ஊழலும், பயங்கரவாதமும் வளரவே 370வது சட்டப்பிரிவு பயன்பட்டது. சில குடும்பங்கள் கொள்ளையடிக்கு அச்சட்டம் உதவியது.
தற்போது காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் குடும்ப ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சி ஏற்படாமல் 370வது சட்டப்பிரிவு தடையாக இருந்தது. 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதால் நீதி நிலைநாட்டப்பட்டு மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் சர்தார் வல்லபாய் படேல், வாஜ்பாய் உள்ளிட்டோர் கனவு நனவாகியுள்ளது. காஷ்மீரில் இதுவரை 42,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் யாரும் கேட்கவில்லை” என்று கூறினார்.