விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது தொடர்பான பிரச்னையில் ஆந்திர சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலத்தில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தவறான தகவல்களை வழங்குவதாகக் கூறி, அவர் மீது தெலுங்கு தேசம் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்திருந்தது.
இதற்கு பதிலளித்துப் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவை நோக்கி கடுமையான விமர்சனங்களைக் கூறினார்.
ஜெகன் மோகனை பதில் கூறவிடாமல் தடுத்து தெலுங்கு தேசம் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது இடைமறித்த சந்திரபாபு நாயுடு, இவ்விவகாரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி பதவி விலகத் தயாரா? என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். இதனால் சபையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.