வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மத்திய அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஏற்கெனவே பிரிட்டன் , ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா வருவோர், விமானம் ஏறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பட்டியலில் தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா ஆகிய 7 நாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த 7 நாடுகளில் இருந்து இந்தியா வருவோர், ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.