பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள் குறித்து கடந்த 4 ஆண்டுகளில் நாடெங்கும் 47 ஆயிரம் புகார்கள் பதிவாகியுள்ள.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பிடிஐ செய்தி நிறுவனம் எழுப்பிய சில கேள்விகளுக்கு தேசிய பட்டியலின மக்கள் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதில், 4 ஆண்டுகளில் பட்டியலின மக்களிடம் இருந்து 47 ஆயிரம் குற்றச்சாட்டுகள் பெறப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா தெரிவித்துள்ளார்.
இதில் கிஷோர் மக்வானா, “பெரும்பான்மையானவை வன்கொடுமை, நிலத்தகராறு, அரசின் சேவைகள் தொடர்பானவை. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார், ஒடிஷா, மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 81% புகார்கள் வந்துள்ளது.
புகார்கள் குவிந்து கொண்டே செல்லும் நிலையில் அவற்றுக்கு தீர்வு காண அடுத்த மாதத்திலிருந்து மாநிலங்கள் தோறும் நேரில் சென்று நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளோம்” என்று தெரிவித்தார்.