”தனிப்பெரும்பான்மை கிடைக்காததற்கு பாஜகவின் ஆணவமே காரணம்” - ஆர்.எஸ்.எஸ். சாடல்

”பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் 240 இடங்களில் சுருங்கியதற்கு அக்கட்சித் தலைவர்களின் ஆணவப்போக்கே காரணம்” என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் சாடி உள்ளார்.
இந்திரேஷ் குமார்
இந்திரேஷ் குமார்எக்ஸ் தளம்
Published on

18-வது மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. அதாவது, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைந்துள்ளது.

இதையடுத்து, பிரதமராக நரேந்திர மோடி, மூன்றாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 30 கேபினெட் அமைச்சர்கள், 5 தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் என 71 பேர் பதவியேற்றனர். அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ”பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் 240 இடங்களில் சுருங்கியதற்கு அக்கட்சி தலைவர்களின் ஆணவப்போக்கே காரணம்” என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் சாடி உள்ளார்.

இதையும் படிக்க: மூன்றாவது முறையாக பிரதமரானார் மோடி.. அமைச்சரவையில் யார் யார்? முன்னாள் முதல்வர்கள் எத்தனைபேர்?

இந்திரேஷ் குமார்
“அமைதிக்காக காத்திருக்கும் மணிப்பூரில் வன்முறை நிறுத்தப்பட வேண்டும்”-ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே கனோட்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், ”ராமர் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்கள் ஆணவம் பிடித்தவர்களாக மாறினார்கள். அதனால் ராமர் அவர்களுக்கு 240 இடங்களை கொடுத்து அவர்களின் ஆணவத்தை நிறுத்தியிருக்கிறார். அதேநேரம், அவர்களின் நம்பிக்கைக்காக அவர்களை பெரிய கட்சியாக உருவாக்கியிருக்கிறார்.

ராமரை நம்ப மறுத்தவர்களுக்கும் 234 இடங்களை (i-n-d-i-a 2 கூட்டணி) கொடுத்தும் தோற்கடித்திருக்கிறார். ராமருக்கு எதிராகச் செயல்பட்டவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கவில்லை. ராமரின் ஆட்சி நீதியானது. ராமரின் பக்தர்கள் பணிவுடன் இருக்க வேண்டும். ராமரை எதிர்ப்பவர்களை எதிர்த்து ராமரே சமாளித்துக்கொள்வார். ராமர் மக்களையும் காப்பாற்றி, ராவணனுக்கும் உதவியவர் என்பதை மறக்க கூடாது.

பாஜகவில் உட்கட்சி ஜனநாயகம் என்பதே ஒழிக்கப்பட்டுவிட்டது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான நேரம் சரியானதல்ல என்று பெரும்பாலான சாதுக்கள், துறவிகள் கூறினார்கள். சாதுக்கள், துறவிகளின் கருத்தை மோடி புறந்தள்ளிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜகவை ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் விமர்சித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: சொன்னது இதுதான்..’ மேடையில் அமித் ஷா கண்டித்ததாக வைரல் ஆன வீடியோ.. விளக்கமளித்த தமிழிசை!

இந்திரேஷ் குமார்
கர்ப்பத்திலேயே கலாசார பாடமா? - மருத்துவர்களுக்கு பயிற்சியளித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com