“எஸ்.சி., எஸ்.டிக்கான இடஒதுக்கீட்டை நீக்குவதே பாஜகவின் நோக்கம்” ஜிக்னேஷ் குற்றச்சாட்டு

“எஸ்.சி., எஸ்.டிக்கான இடஒதுக்கீட்டை நீக்குவதே பாஜகவின் நோக்கம்” ஜிக்னேஷ் குற்றச்சாட்டு
“எஸ்.சி., எஸ்.டிக்கான இடஒதுக்கீட்டை நீக்குவதே பாஜகவின் நோக்கம்” ஜிக்னேஷ் குற்றச்சாட்டு
Published on

பட்டியல் இனத்தோருக்கான இடஒதுக்கீட்டை முற்றிலும் நீக்குவதே பாஜக., ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம் என குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏவும் பட்டியல் இன தலைவருமான ஜிக்னேஷ் மேவானி குற்றம்சாட்டியுள்ளார்.

பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், பட்டியல் இனத்தோருக்கான இடஒதுக்கீட்டை முற்றிலும் நீக்குவதே பாஜக ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம் என குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏவும் பட்டியல் இனத்தின் தலைவர் ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பட்டியல் இனத்தோருக்கான இடஒதுக்கீட்டை முற்றிலும் நீக்குவதற்கான முதல் முயற்சிதான் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு எனவும் அரசமைப்புச்சட்டத்தை நீக்கி சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ், பாஜகவின் எண்ணம் எனவும் தெரிவித்தார். 

நாட்டில் சாதிமுறையிலான இடஒதிக்கீடு முறை கொண்டுவரப்பட்டது வறுமையையும், ஏழ்மையையும் ஒழிப்பதற்காக அல்ல எனவும் மற்ற சமூகத்தில் உள்ள ஏழை மக்களுக்குக் கிடைக்கும் சலுகைகள், உதவிகள் போன்றவற்றை தாங்கள் தடுக்கவில்லை எனவும் ஜிக்னேஷ் குறிப்பிட்டார். ஆனால் இடஒதுக்கீட்டின் மூலம் ஏழ்மை ஒழிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் சேர்ந்து அமைத்துள்ள கூட்டணிக்கு வாழ்த்துக்கள் எனவும் மற்ற கட்சிகளும் ஒன்றாக இணைந்து பாஜகவை எதிர்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com