திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற வெங்கடேஸ்வரர் கோவிலுக்கு காணிக்கையாக செல்லாத பழைய ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் வந்து குவிகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இந்த செல்லாத நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான காலம் அவாகசம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலம் முடிந்த பிறகு, ரூ 4 கோடி செல்லாத நோட்டுக்கள் வந்துள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
கடந்த மாதம், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 2017-18 ஆண்டுக்கான வருவாய் ரூ 2,858 கோடி என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.