புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 மாதம் இலவச உணவுப்பொருட்கள் : நிர்மலா சீதாராமன்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 மாதம் இலவச உணவுப்பொருட்கள் : நிர்மலா சீதாராமன்
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 மாதம் இலவச உணவுப்பொருட்கள் : நிர்மலா சீதாராமன்
Published on

தன்னிறைவு திட்டத்தின் 2ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 வரை 63 லட்சம் விவசாயக் கடன்கள் 86 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், நபார்டு வங்கி மூலம் கூட்டுறவு / கிராமப்புற வங்கிகளுக்கு வழங்கப்பட்ட கடன் 29,500 கோடி எனவும் தெரிவித்தார். அத்துடன், சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்காக வட்டி மே 31 வரை தள்ளுபடி எனக் கூறினார்.

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.4,200 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது என்றார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கவும் உணவு வழங்கவும் ரூ.11,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், நகர்ப்புற ஏழைகளை உள்ளடக்கிய 7,200 புதிய சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

12 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் மூலமாக 3 கோடி முகக் கவசங்கள், 1.2 லட்சம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும், நகர்ப்புறங்களில் வீடற்றவர்களைத் தங்கவைக்கும் முகாம்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். 12 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் மூலமாக 3 கோடி முகக்கவசங்கள், 1.2 லட்சம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், “ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இஎஸ்ஐ திட்டம் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. 10 அல்லது அதற்குத் தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் ஈட்டுறுதி திட்டத்தைப் பெறலாம்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்கள் விலையில்லா அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். அத்துடன் இலவச உணவுப்பொருட்களும் கொடுக்கப்படும். ஏழை மக்கள் ரேசன் கார்டுகள் இல்லையென்றாலும் இலவச உணவுப்பொருட்கள் பெறலாம். 8 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த உணவுத்திட்டம் வழங்கப்படவுள்ளது” என்றார். இதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com