ஆம்புலன்ஸுக்கு வழிவிடாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்: குருகிராம் போக்குவரத்துக் காவல் துறை அதிரடி!

குருகிராம் நகரில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என ஹரியானா மாநிலம் குருகிராம் காவல் துறை தெரிவித்துள்ளது.
ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்ட்விட்டர்
Published on

குருகிராம் நகரில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என ஹரியானா மாநிலம் குருகிராம் காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து குருகிராம் போக்குவரத்து துணை ஆணையர் வீரேந்தர் விஜி, “மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 194இ-கீழ் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

மேலும், சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு உடனடியாக ஆன்லைன் மூலம் அபராத ரசீது அனுப்பப்படும். ஏற்கெனவே குருகிராமில் ஆம்புலன்ஸ் மற்றும் உடல் உறுப்புகள் அவசரமாக எடுத்துச் செல்லும் வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்வதற்கு காவல்துறையால் பச்சை வழித்தடம் அமைத்து தரப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com