உத்தரபிரதேசத்தில் சாலையில் எச்சில் துப்புதல், வாகனத்திலிருந்து குப்பையை எறிதல் போன்ற செயல்களில் ஈடுபடுவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் முக்கிய நகரங்களை தூய்மைப்படுத்தும் நோக்கில் இந்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என பல உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளதால் அதற்காக வழிகளையும் ஏற்படுத்த உள்ளதாகவும் ஆதித்யநாத் உறுதியளித்திருக்கிறார்.
மேலும் தனது மாநிலத்தில் மருத்துவ செலவுக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் வழங்கப்பட்ட பொருளாதார உதவியைப் போலவே எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியிலும் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.